1. செய்திகள்

PM கிசான் 13வது தவணை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
PM Kisan

நீங்களும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமானது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ராஜ்யசபாவில் இத்திட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பிஎம் கிசான் (PM Kisan)

ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12ஆவது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளதாக வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். இந்த பயனாளிகளின் கணக்குகளுக்கு அரசு நேரடியாக பணத்தை மாற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகள் வழங்கப்படுகின்றன. அரசின் இந்த திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். 2019 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வேளாண் துறை அமைச்சர் 2022 ஏப்ரல்-ஜூலை மாதங்களில், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 10.45 கோடியை எட்டியுள்ளது என்று கூறினார். அப்போது இத்திட்டத்தின் கீழ் 11வது தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

பயனாளிகளின் எண்ணிக்கை

முதல் தவணையின் போது 3.16 கோடி பயனாளிகள் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். அதே நேரத்தில், 12ஆவது தவணையின் போது, இந்த எண்ணிக்கை 8.42 கோடியை எட்டியது. இரண்டாவது தவணையில் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 6 கோடி ஆகும். மூன்றாவது தவணையில் இந்த எண்ணிக்கை 7.66 கோடியாக அதிகரித்தது. பின்னர் எட்டாவது தவணையில் 9.97 கோடியாகவும், ஒன்பதாவது தவணையில் 10.34 கோடியாகவும், 11வது தவணையில் 10.45 கோடியாகவும் உயர்ந்தது.

13 வது தவணை

இப்போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13ஆவது தவணைக்காக காத்திருக்கின்றனர். 13ஆவது தவணையாக 2000 ரூபாயை மத்திய அரசு வருகிற ஜனவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் செலுத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன

விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தத் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இது மோடி அரசின் லட்சிய திட்டம் ஆகும்.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: அகவிலைப்படி நிலுவைத்தொகை விரைவில் வரப்போகுது!

பழைய பென்சன் திட்டம் வராது: மௌனம் கலைத்தது மத்திய அரசு!

English Summary: When is PM Kisan 13th term? Important information released by the minister! Published on: 13 December 2022, 11:17 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.