அரசு ஊழியர்களுக்கு 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்படுமா என நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, 8ஆவது சம்பள கமிஷன் அமைக்க தற்போதைய நிலையில் எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் பணத்தின் வாங்கும் சக்தி குறைகிறது. எனவே, இதை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
அகவிலைப்படி (Allowance)
தற்போது 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கான சம்பள அமைப்பு சம்பள கமிஷன் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. கடைசியாக 2014 ஆம் ஆண்டில் 7ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலில் உள்ளன.
இந்நிலையில், 8ஆம் சம்பள கமிஷன் அமைப்பதற்கு அரசிடம் திட்டம் இருக்கிறதா என ஆகஸ்ட் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி, “மத்திய அரசு ஊழியர்களுக்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்க அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை” என்று தெரிவித்தார்.
சம்பள கமிஷன் (Salary Commission)
இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்படலாம் என மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். பொதுவாக சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே பரிந்துரைகள் அமலுக்கு வரும். கடைசியாக 2014ஆம் ஆண்டில் சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. எனவே, 2014ஆம் ஆண்டில் 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்படலாம் எனவும், 2026ஆம் ஆண்டில் 8ஆவது சம்பள கமிஷன் பரிந்திரைகள் அமல்படுத்தப்படலாம் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
மேலும் படிக்க
வருமான வரி செலுத்துவோர், இனி இந்த பென்சன் திட்டத்தில் சேர முடியாது!
அரசு ஊழியர்களுக்கு கணிணி பயிற்சி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தயார்!
Share your comments