1. செய்திகள்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண் எப்பொழுது வெளியிடப்படும்? முழு விவரம் இங்கே!!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Tamil Nadu School

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் எவ்வாறு கணக்கீடப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ஓரிரு நாள்களில் +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அல்லது நாளை மறுதினம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முனதாக, ஜூலை 31 ஆம் தேதிக்குள் +2 மதிப்பெண் குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது விரைவில் வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

- 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்கள் மற்றும் தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% மதிப்பீடு செய்யப்படும்.

இந்த முறையில் கணக்கீடு செய்யப்படும் மதிப்பெண்கள், குறைவாக உள்ளது என்று மாணவர்கள் கருதினால், அவர்களுக்கு விருப்பம் இருந்தால், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத வாய்ப்பளிக்கப்படும் என்றும்  தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

முறையாக 13 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வு – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்தன்மு

ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - ஷிப்ட் முறையில் நடத்துவது குறித்து அரசு பரிசீலனை!

 

English Summary: When will the Plus 2 mark be released in Tamil Nadu? Full details here !!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.