கர்நாடகாவின் கோகாக் நீர்வீழ்ச்சி குகைப் பகுதி அருகே செல்பி மோகத்தால் 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
செல்ஃபி மோகம் (Selfie passion)
இன்றைய இளைய தலைமுறையினரைப் பொருத்தவரை, தம்முடையத் தனிப்பட்ட விஷயத்தை, தன்னுடைய அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள, செல்ஃபி பெரிதும் துணைபுரிகிறது. தம்மைப் பற்றிப் பிறர் பெருமையாகப் பேச வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இதன் காரணமாகவே, எந்த ஒரு சவாலான நிகழ்வானாலும் சரி, உடனே செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்து மற்றவர்களை வியப்படையச் செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதே இல்லை. அது மாதிரியான ஓர் சம்பவம்தான் இது. இருந்தாலும் அதிர்ஷடவசமாக பாதிக்கப்பட்ட நபர் உயிர்பிழைத்தார்.
குகைக்குள் பயணம் (Travel into the cave)
கர்நாடக மாநிலம் கலாபுர்கி மாவட்டம் ஜேவர்கியைச் சேர்ந்த பிரதீப் சாகர், 30. இவர் நண்பர்களுடன், கர்நாடகாவின் கோகாக் நீர்வீழ்ச்சியைக் கண்டுரசிக்கச் சென்றுள்ளார். நீர்வீழ்ச்சியின் குகைப் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது செல்ஃபி எடுக்க முயன்றவர், கால் தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்தார்.
சமூக ஆர்வலர் அயூப் கான் என்பவரது முயற்சியால், போலீசாரின் உதவியோடு 12 மணி நேரத்தில் பிரதீப் சாகர் மீட்கப்பட்டர். அவருக்கு அதிர்ஷ்டவசமாக லேசான காயங்கள் தான் ஏற்பட்டன. ஆனால், கீழே விழுந்ததில் அவருக்கு கடும் மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோகத்தைத் தவிர்ப்போம் (Let’s avoid the craze)
செல்ஃபி எடுக்கும் ஆசை அனைவருக்குமேத் தேவை என்ற போதிலும், அது மோகமாக மாறாத வகையில் யாருக்கும் பாதிப்பு இல்லை. மோகமாக மாறும்போது, நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பெருங்கேடாக அமைவதுடன், உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதை மனதில் நிலை நிறுத்திக்கொள்வோம்.
மேலும் படிக்க...
Share your comments