1. செய்திகள்

100 நாள் வேலைத் திட்டத்தில் இணைய யாருக்கெல்லாம் உரிமை உண்டு? அரசின் புதிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
100 days work

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ளது. லோக்கலில் ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் குறுக்கீடு செய்தால் தாராளமாக மாவட்ட குறை தீர் அலுவலரிடம் முறையிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

18 வயது அவசியம்

18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெறவும் திறன்சாரா வேலை பெறவும் உரிமை உண்டு. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நலிவுற்ற பிரிவினருக்கான தனிநபர் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, பண்ணைக்குட்டை அமைத்தல், நில மேம்பாட்டுப் பணிகள், நிலத்தை சமன் செய்தல், கல் வரப்பு/மண்வரப்பு அமைத்தல், தனிநபர் நிலங்களில் பழம்தரும் மரங்கள் நடுதல், நாடப்(NADEP) உரக்குழி, வெங்காயக் கொட்டகை, அசோலா சாகுபடி அலகு, தோட்டக்கலைத் தோட்டம், தனிநபர் கிணறு, மாடு/ஆடு/கோழி கொட்டகை அமைத்தல் போன்ற பிற தனிநபர்/விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்ட தொழிலாளர்களின் வேலைக்கான தேவை, வருகை பதிவேடு, ஊதிய பட்டியல் உருவாக்கம், நிதி விடுவிக்கும் ஆணை போன்றவை அனைத்தும் இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் தொழிலாளர்கள் வேலை செய்து முடித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கான ஊதியம் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

குறைகள்

இத்திட்ட செயல்பாட்டினை ஆய்வு செய்யும் பொருட்டு ஊராட்சி அளவிலான பிரதிநிதிகளை கொண்டு சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதில் சுட்டிகாட்டப்படும் குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைதீர் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு குறைகள் அவ்வப்போது களையப்பட்டு வருகின்றன. எனவே, மேற்கண்டவாறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

PF கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!

PM Kisan: 2000 ரூபாய் வந்துடுச்சா? இல்லையென்றால் உடனே இதைப் பண்ணுங்க!

English Summary: Who is eligible to join the 100 Day Work Program? Government's new announcement! Published on: 01 March 2023, 10:36 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.