தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. திமுக ஆட்சியைக் கைப்பற்றுமா? அல்லது அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடருமா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.
வாக்குப்பதிவு (Voting)
அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.
75 மையங்கள் (75 centers)
மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் கண்ட இந்தத் தேர்தலில், பதிவான வாக்குகளுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை (Count of votes)
இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன.
ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் இருப்பார்கள்.
முதல் சுற்று முடிவுகள் (First Round Results)
காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாத் தடுப்பு விதிமுறைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் இந்த முறை முழு முடிவுகள் வெளியாக தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது. உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை விவரங்களைப் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிரிமி நாசினி (Sanitizer)
இது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாஹூ கூறியதாவது: கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றுவதாலும், அதிகமான ஓட்டுப்பதிவினாலும், சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டு எண்ணும் மையங்களில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டுச் சுத்தப்படுத்தப்படும். 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தபால் வாக்குகள் (Postal Votes)
இந்த சட்டமன்ற தேர்தலில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. கடந்த 2016 தேர்தலில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 380 தபால் ஓட்டுக்கள்தான் பதிவாகி இருந்தன.
நள்ளிரவு 12 மணி வரை (Until 12 midnight)
கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போகுமா!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
Share your comments