ஐ.நா.,வில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலடி கொடுத்து, அந்நாட்டை வெளுத்து வாங்கிய இந்தியாவின் இளம் அதிகாரி சினேகா தூபேவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஐ.நா., பொதுச்சபை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பொதுச்சபையின் 76வது கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரை இடம்பெற்றது. அதில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, சையத் அலி ஷா கிலானியின் உடல் அடக்கம் உள்ளிட்டவை தொடர்பான கருத்துகள் இடம்பெற்றது.
இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக , ஐ.நா.,வில் இந்தியாவின் முதன்மை செயலராக பணியாற்றும் சினேகா துாபே பேசியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவின் உள் விவகாரங்களை ஐ.நா., பொதுச் சபையில் பேசி, இந்த மன்றத்தின் மாண்பை மீண்டும் குறைக்க முயற்சித்து உள்ளார். உலக அரங்கில் தொடர்ந்து இந்தியா குறித்து பொய்ச் செய்திகளை தெரிவித்து, உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிக்க முயற்சிக்கும் பாகிஸதானிற்கு பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி, விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
பாகிஸ்தான் பிரதமரின் இத்தகைய கருத்துக்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த கண்டனத்திற்கும் உரியவை. மீண்டும், மீண்டும் பொய் பேசி வரும் இந்த மனிதரின் மன நிலையை பார்க்க பரிதாபமாக உள்ளது. இந்த சபையில் உண்மை நிலையை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவுக்கு எதிரான பொய் பிரசாரத்திற்கு ஐ.நா., சபையை தவறாக பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. இது போன்ற பிரசாரங்களால், தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு என்ற பழியில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்ப பாக்., முயற்சிக்கிறது. ஆனால், அந்த முயற்சி ஒவ்வொன்றும் வீணாகிப் போவது தான் பரிதாபம்.
சினேகா துாபே
கோவாவைச் சேர்ந்த சினேகா துாபே, புனே பெர்குசன் கல்லுாரியில் எம்.ஏ., முடித்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில்., பட்டம் பெற்றவர். கடந்த 2012ல், சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐ.எப்.எஸ்., ஆக தேர்வானார். சினேகா துாபே தான், அவர் குடும்பத்தின் முதல் சிவில் சர்வீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை பன்னாட்டு நிறுவனத்திலும், தாயார் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள்.
Al;so Read | ராணுவ நுழைவுத் தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: UPSC அறிவிப்பு
வெளியுறவு துறை அமைச்சகத்தில் பணியாற்றிய சினேகா துாபே, 2014ல், ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டில், இந்திய துாதரகத்தின் மூன்றாம் நிலை செயலராக நியமிக்கப்பட்டார். அதன் பின் ஐ.நா.,வில் இந்தியாவின் முதன்மைச் செயலராக பொறுப்பேற்றார். ஐ.நா., பொதுச் சபையில் பாக்., பிரதமர் இம்ரான்கானை விளாசித் தள்ளிய இவரது பேச்சு, உலகளாவிய ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் பலத்த பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் பாராட்டு
சினேகா தூபேயின் இந்த பதிலடி நம்பிக்கை மற்றும் தைரியமிக்கதாகவும் இருந்ததாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பண்புகள், இளம் அதிகாரிகளிடம் அரிதாகவே காணப்படும். பாகிஸ்தானுக்கு தைரியத்துடன் பதிலடி கொடுத்த சினேகா தூபேவுக்கு இந்தியாவில் பாராட்டு குவிந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் தூபேவின் வார்த்தைகள் அவரது தைரியமான பதிலடிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனால், அவரது பெயர் டுவிட்டரில் நேற்று டிரெண்டிங்கில் இருந்தது.
மேலும் படிக்க
இந்தியாவின் முதல் பறக்கும் கார் திட்டம்: சென்னை நிறுவனம் சாதனை
ஒரே ஒரு போன் போடுங்க: இரயில் பயணத்தில் சீட்டுக்கே வரும் சாப்பாடு!
Share your comments