பி.வி.ஆர்., மல்டிபிளக்ஸ் திரையரங்க தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜ்லி இந்தியாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடைவதற்கான அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்தார். இது பற்றி அஜய் பிஜ்லி கூறியதாவது: பி.வி.ஆர்., திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் விலைகள் அதிகமாக இருப்பதற்கு எதிராக பேசுபவர்களை பற்றி நான் குறைகூற விரும்பவில்லை.
திரையரங்குகள் (Theatres)
மல்டிபிளெக்ஸ் திரைகளுக்கான இயக்க மற்றும் மூலதனச் செலவுகள் தனி அரங்குகளுக்குடன் ஒப்பிடும் போது பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளன. முன்னர் ஒற்றைத் திரையில் ஏசி இல்லாத அரங்கு, ஒரு புரொஜெக்சன் அறை, ஒரு சவுண்ட் சிஸ்டம் இருக்கும். மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு அதைவிட 4 முதல் 6 மடங்கு செலவிட வேண்டியிருக்கிறது.
குறைந்த இடத்தில் அதிக திரைகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பிற்கு செலவிட வேண்டும், மால்களில் இடங்களை லீசுக்கு எடுக்கும் செலவு போன்றவை உள்ளன. தரமான அனுபவத்தை வழங்க செலவிட வேண்டி இருக்கிறது. மக்கள் அந்த அனுபவத்தை பெறும் போது புகார் செய்வதில்லை. மக்கள் தங்களுக்கு கிடைக்கும் தரமான அனுபவத்தால் பெருமளவில் மகிழ்ச்சியடைகின்றனர்.
இல்லையெனில் உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை இவ்வளவு இருந்திருக்காது. தற்போது எங்களின் உணவு மற்றும் குளிர்பானங்கள் தொழில் ரூ.1,500 கோடி மதிப்பு கொண்டது. ஐநாக்ஸ் நிறுவனத்துடன் இணைப்பை அறிவித்துள்ளோம். சில மாதங்களில் அதற்கு ஒப்புதல் கிடைத்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments