1. செய்திகள்

தங்க நகைக்கடன் தள்ளுபடி ஏன்?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Gold Jewelry Discount

தமிழக மக்களை ஸ்டாலின் அரசு ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு நேர்காணல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன், கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா நெருக்கடியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறம்பட செயல்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர். கழகம் எதிர்க்கட்சி ஆன பின்னரும் தொழிற்சங்கம் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

ஒற்றுமை அவசியம்(Unity is essential)

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் வேண்டும் என்றே செய்கிறார்கள். எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் இடமாறுதல் செய்யும் போக்குடன் திமுக அரசு செயல்படுகிறது. எது நடந்தாலும் தொழிற்சங்க பேரவை தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்று கேட்டுக் கொண்டார். ஜெயலலிதா அம்மா அவர்கள் உயிரோடு இருந்த போது 62 கழக எம்.எல்.ஏக்கள் இருந்தனர். ஆனால் தற்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியுடன் 75 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி அந்தஸ்தில் அதிமுக(AIADMK in opposition status)

சிலர் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியுற்றதால் எதிர்க்கட்சி இடத்தில் அமர்ந்திருக்கிறோம். இல்லையெனில் நமது கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும். அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,500 கிடைத்திருக்கும். வருடந்தோறும் 6 இலவச கேஸ் சிலிண்டர்களை தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது.

தங்க நகைக்கடன் அறிவிப்பு எதற்காக?(Why Gold Jewelry Loan Announcement?)

இந்த வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்களை திமுக அரசு முடிக்கு காத்திருக்கிறது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000 இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் குடும்ப வருமானம் ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம் மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் வழங்கப்படாது.

இதேபோல் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் திமுக ரத்து செய்துள்ளது. விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை சமாளிப்பதற்காக மட்டுமே கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற பொய்யாமொழியை திமுக அரசு அறிவித்துள்ளது. அதிலும் பலருக்கு கிடைக்காத வகையில் குளறுபடியான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்: 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம்- மத்திய அரசு அங்கீகாரம்!

English Summary: Why Gold Jewelry Discount? Published on: 20 September 2021, 09:49 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.