பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கக்கூடிய ஒரு உணவு எதுவென்றால் அது இதுவாகத்தாக் இருக்க முடியும்!
ஏன் தவிர்க்க முடியாத சூழலில், ஊட்டச்சத்துக்காக, இதனை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என சைவ உணவு உண்பவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்தரைக்கும் உணவுதான் அது.எண்ணிலாப் பலன்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ள அந்த உணவு முட்டை.
உலக முட்டை தினம் (World egg day)
உலக முட்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.
வருடத்திற்கு 180 முட்டை (180 egg for year)
இந்தியாவில் மொத்த உள்ள 851 மில்லியன் கோழிகள் மூலம் கடந்த வருடம் மொத்தம் 103.32 பில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (IMC)தனிநபர் ஒருவருக்கு தினசரி தேவை 0.5 முட்டை என்ற அளவில் பரிந்துரை செய்கிறது. அதாவது வருடத்திற்கு 180 முட்டை ஒரு நபருக்கு தேவை.
இந்தியா முழுவ திலும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சராசரி அளவு 79 முட்டைகள் ஒரு வருடத்திற்கு ஆகும். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவு.
தமிழகத்தில் மொத்தம் 12.08 கோடி கோழிகள் இருப்பதால், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நபருக்கு கிடைக்கின்ற முட்டையானது 246 (ஒரு வருடத்திற்கு என்று உள்ளது
ஊட்டச்சத்துக்கள் (Nutrients)
கலோரி-72-80 கிலோ, புரதம் - 6.3 கிராம், கார்போஹைட் ரேட்டுகள் - 0.6 கிராம், மொத்த கொழுப்பு - 5.0 கிராம், மோனா நிறைவுறா கொழுப்புகள் - 2.0 கிராம், பாலில் நிறைவுறா கொழுப்புகள் 0.7கிராம், நிறைவுற்ற கொழுப்பு - 1.5கிராம், கொலஸ்டிரால் 213 மில்லி கிராம் மற்றும் சோடியம் 63 மில்லி கிராம்.
வைட்டமின் மாத்திரை (Vitamin Tablet)
பல சத்துக்களைக் கொண்ட முட்டையானது மிகவும் தரமான புரதசத்தினை மனிதர்களுக்கு தரக்கூடியதாகும். அனைத்து வயதினருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தரக்கூடிய நிலையான மூலப்பொருள் முட்டை. மனித உடலுக்குத் தேவையான வைட்டமின், சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் அனைத்தும் முட்டையில் உள்ளதால் முட்டை வைட்டமின் மாத்திரை என்றே அழைக்கலாம்.
முட்டையில் உள்ள கோலின் என்ற வைட்டமின், மனிதனின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. இதனால் பெண்களின் கர்ப்ப காலத்தில், குழந்தைகளுக்கு முட்டையை கொடுப்பதினால் கோலினுடைய தேவை பூர்த்தி ஆகிறது.
வைட்டமின் மாவின் குறைபாடு தற்காலத்தில் அதிகளவில் கண்டறிப்படுகிறது. முட்டையில் வைட்டமின் D அளவு இயற்கையாகவே அதிகமாகவே இருப்பதால், அதனை உட்கொள்ளும் பொழுத வைட்டமின் D தேவையும் பூர்த்தியாகிறது.
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அடர்த்தி, மனித உடலின் அதிகமான ஜீரணிக்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் ஆகிய காரணங்களால் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு காலங்களில் முட்டையினை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
மேலும் படிக்க...
இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை ஊக்கத்தொகை - விவசாயிகளுக்கு அழைப்பு!
மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!
Share your comments