1. செய்திகள்

கொடைக்கானலில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்

KJ Staff
KJ Staff
Kodaikanal Forest Fire

கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.

கொடைக்கானல் வனசரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் கட்டு கடங்காமல் பல ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டு தீ, காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் தீவிரம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மச்சூர் பகுதியில், தோகை வரை என்னும் இடத்தில் தீ பற்றிக்கொண்டு எரிந்த நிலையில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் மயிலாடும் பாறை என்னும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கட்டு கடங்காமல் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.

இது அரிய மூலிகைத் தாவரங்கள் மற்றும் மதிப்புமிக்க மரங்கள் எரிந்து சாம்பலாவதற்கு வழிவகுத்தது, அத்துடன் அரிய வகை பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது.

தற்போது எரிந்து வரும் காட்டு தீ மலை பகுதிகளின் மேல் பற்றி எரிந்து வருவதால் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காட்டு தீ அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்கு தீ தடுப்பு எல்லைகள் அமைக்கப்படும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து காற்றின் வேகத்தில் தீ பரவி வருவதால் கொடைக்கானல் மச்சூர் மலை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க..

கொடைக்கானலில் அத்திப்பழ சீசன்: இந்த ஆண்டு அதிரடி விளைச்சல்!

கொடைக்கானலில் கருப்பு கேரட்! விவசாயிகளின் புது முயற்சி!

English Summary: Wild fires Spreading in Kodaikanal Soldiers Struggle to Fire Published on: 11 March 2022, 03:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.