விளைநிலங்களில் வளரும் பயிர்களை வனவிலங்குகள் நாசம் செய்வது வழக்கமாகி விட்டது. வனத்துறையிடம் உரிய முறையில் தெரிவித்தும் எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாத நிலையில், விவசாயிகள் நோட்டாவுக்கு வாக்களிக்க இருப்பதாக முடிவு செய்துள்ளனர். இதனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு (Nota) வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
பயிர்கள் நாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை (Elephant), மான் (Deer), காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் (Maize) உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன. மேலும் புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்வதும் தொடர்கதையாக உள்ளது. ஆனாலும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் (Forest Department) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறிவருகிறார்கள்.
நோட்டாவுக்கு வாக்கு
இந்தநிலையில் நேற்று பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை பகுதியில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் வேணுகோபால் (Venugopal) கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை (Crop damage) யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே விவசாயிகள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை
Share your comments