1. செய்திகள்

60 ஆண்டு கால கனவு நனவாகுமா? அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விறுவிறு!

R. Balakrishnan
R. Balakrishnan

Athikadavu - Avinashi Project

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள், 87 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தாண்டு ஜூலை, ஆக., மாதங்களில் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,652 கோடி ரூபாய் செலவில், அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 1,045 குளங்கள், குட்டைகள், 24 ஆயிரத்து 468 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.

அன்னுார், பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, ஆகிய இடங்களில் நீரேற்று நிலைய கட்டுமானப்பணி முழுமை பெற்றுள்ளது. அனைத்து நீரேற்று நிலையங்களிலும், 'டிரான்ஸ்பார்மர்' (Transformer) பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.

மொத்தம், 1,058 கி.மீ., நிலத்தடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 261 கி.மீ.,க்கு இரும்பு குழாய் பதிக்கப்பட உள்ள நிலையில், இதுவரை, 217 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது. 798 கி.மீ.,க்கு உயர் அடர்த்தி பாலியுரேத்தின் குழாய் பதிக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரை, 642 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது.

திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில், ''இதுவரை, 87 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மழையால், பணியில் சற்று தொய்வு தென்பட்டுள்ளது. ''மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தாண்டு ஜனவரியில் திட்டப்பணி நிறைவு பெற்று, பரிசோதனை மேற்கொள்ளப்படும். ''ஜூலை, ஆகஸ்டில் பெய்யும் மழை, வெளியேறும் நீரின் அடிப்படையில், வெள்ளோட்டம் பார்க்கப்படும்,'' என்றார்.

60 ஆண்டு கனவு

ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர், பவானிசாகர் அணை வழியாக காளிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி, அதில் இருந்து வெளியேறும் நீரை, 1.5 டி.எம்.சி.. அளவுக்கு நீரேற்று நிலையங்கள் வாயிலாக பெற்று, இத்திட்டப் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு பெய்த மழையால் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறியது. அடுத்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதம் பலத்த மழை பெய்து, காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேறும்போது, அத்திக்கடவு திட்டம் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளதால், அடுத்தாண்டு மழை பொழிவு, மூன்று மாவட்ட மக்களின், 60 ஆண்டுகள் கனவு திட்டத்தை நனவாக்கும்.

மேலும் படிக்க

முதல் முறையாக சென்னையில் 20 சாலைகள் மூடல்: 523 இடங்களில் வெள்ளம்!
மின்னல் வேகத்தில் மழை நீர் வடியும் வழிமுறை என்ன?

English Summary: Will the 60-year-old dream come true? Athikadavu - Avinashi projects are in full swing!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.