பண்டிகை நெருங்கி வருவதால், ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகளை அளிப்பதா? அல்லதுக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பள்ளிகள் திறப்பு (Opening of schools)
தமிழகம் முழுவதும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா பரவல் அச்சம் காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதாவது 1 முதல் 8-ம் வகுப்புகள், அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி தொடங்க உள்ளன.
முதலமைச்சர் ஆலோசனை (Chief Minister's advice)
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கூடுதல் தளர்வுகள் (Additional relaxations)
தமிழகத்தில் கொரோனாப் பரவல் தினசரி 1,200 என்ற நிலைக்கு குறைந்துள்ளதால், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
கூடுதல் கட்டுப்பாடுகள் (Additional controls)
அதேநேரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள், பள்ளிகள் திறப்பு, மழை காலம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றியும், இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி கோவில்கள் திறப்பு ஒருபுறம் இருந்தாலும், மீண்டும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது.
தீபாவளி
குறிப்பாக தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, கட்டுப்பாடுகளை மக்கள் காற்றில் பறக்கவிட்டால், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதால்,கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க...
சீனாவில் மீண்டும் கொரோனா- அச்சத்தில் உலக நாடுகள்!
Ayog warns! கொரோனா மீண்டும் வேகமாகப் பரவக் கூடும்- நிதி அயோக் எச்சரிக்கை!
Share your comments