இயற்கை இந்த வாழ்க்கை தான் நாம் உயிர்வாழ உயிர்நாடி. இந்த உன்னதப்படைப்பின் ஆற்றலை மனித உணர ஆரம்பித்துவிட்டால், அவன் பக்குவப்பட்டுவிடுவான். ஏனெனில் இயற்கை நமக்கு அத்தனையையும் சொல்லித்தர வல்லது. அதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டால், பூமியிலும் சொர்க்கத்தைக் காணலாம்.
நம் முன்னோர்கள், மண் வீடு, களி, கம்மஞ்சோறு, கால்நடைகள் நம் சொந்தம் என வாழ்ந்ததால், இயற்கை அவர்களுக்கு அத்தனை நலங்களையும், வளங்களையும் வாரி வழங்கியது. மனிதன் நாகரீகத்தின் பின் ஓட ஆரம்பித்ததால் தற்போது ஆரோக்கியத்தைத் தவறவிட்டுவிட்டு, நோய்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கிறான்.
ஆக நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சில மணி நேரம் அனுபவிக்க விரும்புபவரா நீங்கள்? அப்படியானால், இந்த இயற்கைக் குடில் உங்களின் எதிர்பார்ப்புகளைக் கட்டாயம் நிறைவேற்றும்.
பாரம்பரிய வாழ்க்கையை அனுபவிக்க நினைப்பவர்களுக்காக, திருவண்ணாமலையில் இயற்கை குடில் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன.
சிறப்பு அம்சம் (Features)
-
மண்வீடு, கயிற்றுக் கட்டில், உண்ண பாரம்பரிய உணவு வகைள், இயந்திரம் பொருத்தப்பட்ட மாட்டுவண்டி மூலம் கிரிவலம், கால்நடைகளை வளர்க்கப் பயிற்சி இவை அனைத்தும் இந்தக் குடிலின் தனிச்சிறப்புகள்.
-
வீடுகள் மஞ்சம்புல் என்பதைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால், வெளியில் அதிகவெப்பம் நிலவினால் உள்ளே குளிர்ச்சியைக் கொடுக்கும்.
-
வெளியே குளிர் நிலவினால், அதனை கிரகித்துக்கொண்டு உள்ளே வெப்பத்தைக் கொடுக்கும். இதனால் உள்ளே இதமான சூழலை அனுபவிக்க முடியும்.
உணவுகள் (Food)
இங்கு பரிமாறப்படும் உணவுகள் அனைத்தும் செக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும்.
பாரம்பரியமாக நம் முன்னோர்கள் சுவைத்த உணவுகள், கம்மங்கூழ், களி, சிறுதானிய சிற்றுண்டிகள் மாட்டுப்பால் காபி டீ, நாட்டுச்சர்க்கரை, வெல்லம் சேர்க்கப்பட்ட உள்ளிட்டவை திண்பண்டங்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2017ம் ஆண்டு முதல் இயங்கிவரும் இந்த இயற்கை குடில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களை வெகுவாக ஈர்க்கும். குறிப்பாக வெளிநாட்டினர் விரும்பி வந்துத் தங்கிச் செல்கின்றனர்.
இருப்பினும், கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்தக் குடில் அடுத்த வாரம் முதல் இயங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள், 7010454424 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
பயிர்களின் ஹார்மோனாக மாறி உயிரூட்டும் டிரைக்கோடெர்மா விரிடி!
அடமானம் இல்லாமல் ரூ.1.60 லட்சம் கடன் வழங்கும் PKCC- பெறுவது எப்படி?
Share your comments