1. செய்திகள்

மாம்பழம் விலை வீழ்ச்சியால், அரசே விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Mango

Credit : Indian Express

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலை அள்ளி, அத்துரனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி (Mango Cultivation) செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மாம்பழங்கள் பாலக்கோடு, காரிமங்கலம், வெள்ளிச்சந்தை பகுதிகளில் உள்ள மாங்காய் மண்டிகளுக்கும், மாங்கூழ் (Mango Juice) தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

கொரோனா ஊரடங்கு (Corona Curfew) காரணமாக ஒரு சில மாங்கூழ் தொழிற்சாலைகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. மண்டிகள் மூடப்பட்டுள்ளதால் மாம்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பெங்களூரா, அல்போன்சா, பீத்தா், நீலம், பங்கனப்பள்ளி, செந்தூரா உள்ளிட்ட மாங்காய்கள் டன் ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாம்பழங்கள் அறுவடை (Harvest) செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணமாக மண்டிகள் திறக்காததால் மாம்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் மிக குறைந்த விலைக்கே மாம்பழங்களை கொள்முதல் செய்கின்றன.

மாம்பழத்திற்கு தரத்திற்கு ஏற்ற விலை கிடைக்காததால் மா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசு மாம்பழம் டன் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

மண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்!

வெளிமாநிலங்களில் தேவை அதிகரிப்பு! இளநீர் விலை உயர்வு!

English Summary: With the fall in mango prices, farmers are demanding that the government fix the price

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.