நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் (Banana Crops) செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
வாழை விலை உயர்வு:
சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு (Market) வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கு விற்பனை ஆனது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கு விற்பனையானது. வாழைத்தார்கள் விலை உயர்வடைந்துள்ளதால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அளித்ததில் தமிழகம் முதலிடம்! மத்திய அரசு தகவல்!
கடும் வீழ்ச்சியில் வெங்காயத்தின் விலை! விவசாயிகள் கவலை!
Share your comments