100க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்டத் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் இருந்தால் தான் இனி அனுமதி வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளின் மகத்துவம் (The magnificence of hospitals)
உயிர்காக்கும் சேவையில் மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்குத் தகுந்த நேரத்தில் தலைசிறந்த மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நோக்கத்தில்தான் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளிக்கிறது.
கட்டணக்கொள்ளை (Plunder)
ஆனால், நாளடைவில், தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளை பணம் எடுக்கும் எந்திரங்களாகக் கருதும் அளவுக்குக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன. அதேநேரத்தில், நோயாளியின் நிதிநிலைமையை உணர்ந்துக் குறைந்தக் கட்டணத்தில் சிறந்த சேவை செய்யும் தனியார் மருத்துவமனைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் (Oxygen generator)
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்த சுகாதாரத்துத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், எதிர்காலத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்று நினைக்கிறோம்.
பாதிப்பு ஏற்பட வாய்ப்பு (Likely to cause harm)
ஆனால் அப்படி வந்தாலும் ஏற்கனவே இருந்ததை போல் தனியார் மருத்துவமனைகளில் கட்டமைப்பு என்பது இல்லாமலேயே போய் விட்டால், அது திரும்பவும் நமக்கு ஒரு பெரிய அளவிலான பாதிப்பைத் தரக் கூடும்.
அதனால் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பது அவசியமான ஒன்று .
மே 7-ஆம் தேதி 730 மெட்ரிக் டன்னாக இருந்த தினசரி கையிருப்பு இன்று ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஆக்ஸிஜன் வசதி (Oxygen facility)
எல்லா தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திக் கொள்வது என்பது அவசியமான ஒன்று.
அனுமதி கிடையாது (Not allowed)
இதனைக் கருத்தில்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கும் பட்சத்தில், அதற்கு தேவையான ஆக்ஸிஜன் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே அந்த மருத்துவமனைக்கான அனுமதியை வழங்கப்படும். இந்த வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும்.
தடுப்பூசி (Vaccine)
ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி ஒதுக்கீடு செய்தும், 25% தடுப்பூசிகளை தனியாருக்கு வழங்குவேன் என ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
கோரிக்கை (Demand)
ஆனால் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால் 10 % தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கும், மாநில அரசாங்கத்திற்கு 90 % தடுப்பூசிகளை வழங்கக் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை ஒன்றிய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
பாதுகாப்பது நம்முடைய கடமை (It is our duty to protect)
தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது ஆர்வம் காட்ட வேண்டும். பணத்தைவிட தற்போதுப் பொது மக்களைக் கொரோனாவிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பது நம்முடைய கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!
இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!
Share your comments