தேசிய ராணுவம் மற்றும் கடற்படை அகாடமிக்கான நுழைவுத் தேர்வு எழுத, திருமணம் ஆகாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்' என, யு.பி.எஸ்.சி., நேற்று அறிவித்துள்ளது.
இரண்டு முறை
என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கிறது. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த தேர்வுகளை நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது தேர்வு நவ., 14ல் நடக்கிறது. தகுதியுடைய நபர்கள் அக்., 8 வரை 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
ராணுவம் மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த திருமணம் ஆகாத ஆண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.இதை எதிர்த்து, வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், ராணுவ அகாடமி தேர்வு எழுத தகுதி வாய்ந்த பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தது.
'ஆன்லைன்'
இதையடுத்து, 'தேர்வு எழுத தகுதியுடைய பெண்கள் அக்., 8 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 'விண்ணப்ப பதிவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை' என, யு.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது.
மேலும் படிக்க
BYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி!
Share your comments