1. செய்திகள்

உலக இருதய தினம்

KJ Staff
KJ Staff

சர்வதேச இருதய அமைப்பு, ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் தேதியை, உலக இருதய தினமாக அனுசரிக்கிறது. இந்தத் தினத்தின் போது, உங்கள் இதயம் தொடர்பான நோய்கள் குறித்தும், மாரடைப்பு நோயிலிருந்து பாதுகாக்கும் உணவுகள் என்ன என்பதைப் பற்றியும்அறிவோம். 

மாரடைப்பு என்பது என்ன? 

பொதுவாக மாரடைப்பு என்பது, இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைபடுவதாலோ அல்லது முற்றிலுமாக நிறுத்தப்படும்போதோ ஏற்படுகிறது. உங்கள் மார்பு பகுதியில் அடிக்கடி வலி உண்டானால், இந்த நோய் பாதிப்பு இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

மாரடைப்பு தீவிரம் அடையும் பட்சத்தில் உயிரிழப்பு கூட நிகழும். எனவே, அதை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமான ஒன்று.

 மாரடைப்பின் ஆரம்பக் கால அறிகுறிகள்

  • மாரடைப்பின் மிக முக்கியமான அறிகுறி நெஞ்சு வலி, நெஞ்சு இறுக்கப்படுவது போன்றும், அழுத்தப்படுவது போன்றும் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். 
  • வாந்தி, வியர்வை மற்றும் மூச்சு விடுவதில் சிக்கல் போன்றவை மாரடைப்பின் மற்ற அறிகுறிகள். 
  • நெஞ்சு வலி ஏற்படுதல், அத்தோடு இடது தோள்பட்டை, வலது தோள்பட்டை, கழுத்து, கை, வயிறு என வலி பரவுவது மாரடைப்பு தீவிரமாவதற்கான அறிகுறிகள்.
  • ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப் படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன, பெண்களை பொறுத்தவரையில், உடல் அசதி, தூக்கமின்மை, மூச்சுத் திணறல் போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன. 
  • இதைத் தவிர, தானமாக இதயத்தைப் பெறுபவர்களுக்கும் கூட மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 
  • சில நேரங்களில், மாரடைப்பானது எவ்வித அறிகுறியும் இல்லாமல், முதல் தாக்கத்திலேயே உயிரைக் குடிக்கலாம். இதற்கு அமைதியான மாரடைப்பு என்று பெயர். 

இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள்

  • ஒமேகா-3எஸ் நிறைந்த மீன்களை அதிகம் சாப்பிடவும். சூரை, காலா, கானாங்கெளுத்தி, கொய்மீன் உள்ளிட்டவற்றை அதிகம் உட்கொள்ளவும். 
  • பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட சத்தான கடலை வகைகளை சாப்பிடவும். 
  • ஸ்ட்ராபெரி, அவரிநெல்லி, குருதிநெல்லி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை சாப்பிடலாம். 
  • ஆளி விதைகள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அவற்றை அரைத்தோ, வேகவைத்தோ சாப்பிடலாம்.
  • ஓட்ஸ் பொதுவாக இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. 
  • தட்டைப்பயிறு, ராஜ்மா சுண்டல் உள்ளிட்ட பீன்ஸ் வகைகளில், நார்ச்சத்து, வைட்டமின் பி, மினரல் போன்றவை அதிகம் உள்ளதால், அவை இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. 
  • தினமும் 4 அவுன்ஸ் ரெட் ஒயினை குடிக்கலாம். இது குளோஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.
  • கேரட், சர்க்கரைவல்லி கிழக்கு, சிவப்பு மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் இதயத்தை வலுப்படுத்துகிறது. 
  • கீரை வகைகள் பொதுவாகவே ஆரோக்கியமானவை. அவற்றை சாலட்களாக சாப்பிடலாம். 
  • ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி போன்ற பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. 
  • தக்காளிப் பழத்தில் இதயத்தை பாதுகாக்கும் சக்திகள் நிறைந்துள்ளது. அதிக அளவு உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் 
  • 70% கோகோ நிறைந்த டார்க் சாக்லெட் 
    பிராக்கோலி, இது வெளிநாட்டு உணவு என்றாலும், இந்தியாவிலும் தற்போது கிடைக்கிறது. இதுவும் இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. 
English Summary: World Heart Day Published on: 29 September 2018, 07:08 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.