இன்று சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச இசை தினம், மன அழுத்தத்தை போக்கும் மாமருந்து இவ்விரண்டிலும் உண்டு. உலகில் பெரும்பாலானோர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். உலக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் மன அழுத்தால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வயதானவர்கள் மட்டுமல்லாது, பெரியவர்கள், இளைஞர்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள் என அனைவரும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர சிறந்து யோகா மற்றும் இசை. இன்று உலகம் முழுவதும் யோகா தினம், இசை தினம் கொண்டாட பட்டு வருகிறது. மொழி, இனம், மதம் என அனைத்தையும் தாண்டி பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டது எனலாம்.
5 வது சர்வதேச யோகா தினம்
2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் யோகா செய்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெளிநாடு வாழ் இந்தியர்களும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். இவ்வாண்டிற்கான கரு பொருளாக காலநிலை மாற்றம் கொடுக்க பட்டது.
சர்வதேச இசை தினம்
இசையினை விரும்பாதோர் இவ்வுலகில் இல்லை எனலாம். இசைக்கும் போதும் இசையை கேட்கும் போதும் நம் மனது அதனுடன் ஒன்றி போய் விடுகிறது. பொதுவாக இறைவனை அடைய எளிய வழி இசை என்பார்கள். இசை நம் அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்றால் மிகையாகாது. இசையினை நாம் கேட்கும் போது எல்லா விதமான உணர்வினை பெற முடியும், மகிழ்ச்சி, துக்கம், அழுகை, சிரிப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்று மட்டுமல்லாது எப்பொழுதும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் வாழ யோகா செய்வதையும், இசை கேட்பதையும் பழக்கமாக்கி கொள்வோம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments