1. செய்திகள்

டெல்லியில் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு: 22 உறுப்பு நாடுகள் பங்கேற்பு

KJ Staff
KJ Staff

உலக வர்த்தக அமைப்பிற்கான 12 வது,  அமைச்சர்கள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் மொத்தம் 22 நாடுகளை சேர்த்த அமைச்சர்கள் பங்கு கொள்கின்றனர். 12 வளரும் நாடுகளும், 6 பின்தங்கிய வளர்ச்சி கொண்டுள்ள நாடுகளும் இதில் கலந்து கொண்டுள்ளன.

இரண்டு நாள் மாநாட்டில் முக்கியம்சமாக வர்த்தகம் மேம்பாடு மற்றும் எதிர் கொள்ளும் சவால்கள் ஆகியன விவாதிக்க பட உள்ளது. மேலும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், அதனை தீர்க்கும் உபாயங்கள் குறித்தும் பேசப்பட உள்ளனர்.

முதல் நாள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று 22 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் முக்கிய விவாதமாக வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகள் வர்த்தக ரீதியாக எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் என்பனவாகும்.

சீனா, பிரேசில், சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி , கசகஸ்தான், பங்களாதேஷ் போன்ற உறுப்பு நாடுகள் பங்கேற்றுள்ளன.  உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்டோ அஸிவேடோ அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

மாநாட்டினை துவக்கி வைத்து பேசிய நமது வர்த்தக துறை அமைச்சர் Dr.அனுப் வாதவன், உலக வர்த்தகத்தில் எதிர் கொள்ளும் புதிய சவால்கள்,  புதிய விதிமுறைகள், தடைகள் ஆகியன முக்கியம்சமாக விவாதிக்க படும் என்றார்.  

பின்தங்கிய நாடுகளை சேர்த்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்க்கொள்ளும் பொதுவான வர்த்தக ரீதியான பிரச்சனைகள்,  வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் ஆகியன விவாதிக்க படுகின்றன.

English Summary: WTO Ministerial Conference Held In Delhi: 22 Countries Are Participating: Discuss About Multilateral Rule-Based-Trading

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.