சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் உள்ளன. இரு மாடல்களும் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10S மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாத இறுதியில் இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகிவிட்டது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S மாடல்களில் 6.43 இன்ச் பன்ச் ஹோல் ரக 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 90Hz, AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸரும், நோட் 11S மாடலில் மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸரும் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது. இத்துடன் LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11 மாடலில் 50MP பிரைமரி கேமராவும், 13MP செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11S மாடலில் 108MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா இருப்பது குறிப்பிடதக்கது.
கனெக்டிவிட்டிக்கு இரு மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட், 4ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, GNSS, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13 வழங்கியுள்ளனர். இத்துடன் 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை விவரங்கள் இதோ! (Here are the pricing details!)
4GB + 64GBஸ்டோரேஜ் – ரூ. 13,499யும்
6GB + 64GBஸ்டோரேஜ் – ரூ. 14,499யும்
6GB + 128GBஸ்டோரேஜ்– ரூ. 15,999க்கும் விற்பனையாகிறது.
செய்தி:
நாங்க ஆட்சிக்கு வந்த, "10 நாட்களில் விவசாய கடன் ரத்து"! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
ரெட்மி நோட் 11 (Redmi Note11)ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஹாரிசான் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது. அதே நேரம்,
ரெட்மி நோட் 11S (Redmi Note 11S)
6GB + 64GB ஸ்டோரேஜ் – ரூ. 16,499
6GB + 128GB ஸ்டோரேஜ் – ரூ. 17,499
8GB + 128GB ஸ்டோரேஜ்– ரூ. 18,499க்கும் விற்பனையாகிறது.
ரெட்மி நோட் 11S (Redmi Note 11S) ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், ஹாரிசான் புளூ மற்றும் போலார் வைட் நிறங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
தமிழகம்: அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தோர், இதை புதுப்பித்தீர்களா?
Share your comments