கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி (Ponmudi) தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மதிப்பெண்
கொரோனா பரவல் பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு இன்றி மதிப்பெண் வழங்கும் முறையின்படி, முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தேர்வு துறை அலுவலகத்தில், காலை, 11 மணியளவில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்.
கல்லூரி சேர்க்கை
பிளஸ் 2 முடிவுகள் வெளியானதை அடுத்து, கல்லூரி சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறுகையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறினார்.
மேலும் படிக்க
ரஷ்ய விண்வெளி பயிற்சிக்கு அரியலுாரைச் சேர்ந்த இரு அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு!
மக்களைத் தேடி மருத்துவம்: வீடு தேடி வருகிறது மாத்திரை
Share your comments