1. மற்றவை

100 ரூபாய் நாணயமாக அறிமுகம்: ஏன்?

Deiva Bindhiya
Deiva Bindhiya
100 Rupee Coin Introduce: Why?

இந்தியாவில் இப்போது நிறைய ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக, 2016ஆம் ஆண்டில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்த பிறகு, புதிய வடிவிலான நோட்டுகள் பயன்பாட்டுக்கு வந்தன. 2000 ரூபாய் 200 ரூபாய் என, இதற்கு முன்னர் நாம் பார்த்திராத ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டன.

உண்மையில், இவ்வளவு அதிக மதிப்பு கொண்ட நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளிவருகிறதா அல்லது எடிட் செய்யப்பட்டு ஆன்லைன் தளங்களில் பரப்பப்படுகிறதா என்ற சந்தேகமும் நிறையப் பேருக்கு வரலாம். இதுபோன்ற நாணயங்கள் அச்சிடப்படுவது உண்மைதான், இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவை பொதுமக்களின் புழக்கத்துக்காக அச்சிடப்படுவது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இவை சிறப்பு நாணயங்களாகும். அரசு சார்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை சிறப்பிக்கவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ, இதுபோன்ற நாணயங்கள் அவ்வப்போது அச்சிடப்படுகிறது. அவை பொதுமக்களின் புழக்கத்துக்கு விடப்படாது. அந்த வகையில் தற்போது 100 ரூபாய் நாணயம் அச்சிடப்படுகிறது.

தற்போது இந்த 100 ரூபாய் நாணயம், டெல்லி பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கி அச்சிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதற்கான அரசாணையை மத்திய நிதியமைச்சகம் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த நாணயம் 44 மில்லி மீட்டர் விட்டத்தில், 35 கிராம் எடையுடன் அச்சிடப்படும். 50 சதவீத சில்வர், 40 சதவீத காப்பர், 05 சதவீத நிக்கல் மற்றும் 05 சதவீத துத்தநாகம் கலப்பில், இந்த நாணயம் தயாரிக்கப்படுகிறது.

காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?

இந்த நாணயத்தின் சிறப்பு, ஒரு பார்வை (The specialty of this coin, an overview):

இந்த நாணயத்தின் சிறப்புகள் என்னவென்றால், இதில் சிங்க முகங்கள் கொண்ட அசோகர் தூண் பொறிக்கப்பட்டிருக்கும். சத்யமேவ ஜயதே என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கும். பாரத் என தேவநாகரி மொழியிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது. நாணயத்தின் பின் புறத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தின் புகைப்படம் பொறிக்கப்படும். CENTENARY YEAR OF UNIVERSITY OF DELHI என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. 2022 என்ற ஆண்டுக் குறிப்பும், இந்த நாணயத்தில் இடம்பெற்றிருக்கும் என்பது சிறப்பாகும்.

இதுபோன்ற உயர் மதிப்பு கொண்ட நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தால் ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் நினைக்கலாம். ஆனால் அவை தொலைந்துவிட்டால் பெரிய தொகையை இழக்க நேரிடும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் கருத்தில் கொண்டு, பெரிய மதிப்பு கொண்ட நாணயங்கள் பெரும்பாலும் வெளியிடப்படுவது இல்லை.

மேலும் படிக்க:

மீண்டும் சிறந்த கிராம ஊராட்சிக்கு உத்தமர் காந்தி விருது: அறிமுகம்

மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு: அரசு வேண்டுகோள்

English Summary: 100 Rupee Coin Introduce: Why? Published on: 25 April 2022, 01:02 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.