மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின்படி 12 சதவீதம் வருமானம் கிடைத்துள்ளதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தற்போது அறிவித்துள்ளார்.
தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme)
கடந்த 2003ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி பலன் கிடைத்து வந்தது. இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டில் இருந்து அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது, தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்ததில் இருந்து தற்போது வரைக்குமே மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் இல்லை எனவும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்து அதற்கான மாற்றங்களை செய்ய வேண்டும் என நிதித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்தபோது இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஆண்டுக்கு சுமார் 12 சதவீதம் வரைக்கும் வருமானம் கிடைத்துள்ளதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தீபக் மெஹந்தி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தேசிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 9.4 சதவீத வருமானமும், மாநில அரசு ஊழியர்களுக்கு 9.2% வருமானமும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இன்சூரன்ஸ் பாலிசி விதிகளில் மாற்றம்: இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments