1. மற்றவை

விவசாயப்படிப்பில் 14 பதக்கங்கள்- விவசாயி மகன் சாதனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
14 medals in agriculture - Farmer's son's achievement!
Credit : Maalaimalar

விவசாயி மகன் ஒருவர், விவசாயப் பாடத்திட்டத்தை விரும்பிப்படித்து, 14 பதக்கங்களைப் பெற்றிருப்பது மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஏக்கரில் விவசாயம் (Agriculture on 2 acres

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2-வது மகனான பிரசாந்த் மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பி.எஸ்சி. தோட்டக்கலைத்துறையில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

பட்டமளிப்பு விழா (Convocation)

இவர் அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதைப் பாராட்டி அவருக்கு பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத் துறை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

முத்தமழை (Kiss)

பிரசாந்த் பதக்கங்களைப் பெற்றதும் அவரது தாய் வசந்தாவும், தாத்தா சென்னேகவுடாவும் மேடையில் ஏறி அவருக்கு முத்தமழை பொழிந்தனர். மேலும் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர்.

விவசாய விஞ்ஞானி (Agricultural Scientist)

பிரசாந்தின் தந்தைக்கு வங்கியில் ரூ.2.40 லட்சம் கடன் உள்ளது. இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், எனது குடும்பம் விவசாய குடும்பம். அதனால் விவசாயத்தின் மீது எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் வந்தது. இதனால் விவசாயத்தில் சாதிக்க விரும்பினேன். விவசாயத்தில் பலரும் பாரம்பரியமாக ஒரே பயிரை சாகுபடி செய்து வருகிறார்கள். இது பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாய விஞ்ஞானியாக மாறுவதே எனது குறிக்கோள். அத்துடன் எனது படிப்புக்காக எனது பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டுக்கள்

தமது குடும்பத்தினர் செய்துவரும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக, விவசாய விஞ்ஞானியாக இவர் விரும்புவது அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.

மேலும் படிக்க...

பழ மரங்களில் விளைச்சலை அதிகரிக்கலாம்! - வேளாண்துறை செயல் விளக்கப் பயிற்சி!!

மகசூலை அதிகரிக்க பயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி! 

மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

English Summary: 14 medals in agriculture - Farmer's son's achievement! Published on: 08 April 2021, 07:53 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.