ஆண்களுக்குப் பொதுவாக உடலில் ரோமங்கள் இருப்பது சகஜம். அப்படி அதிகப்படியான உரோமங்களுடன் பிறந்த குழந்தைக்கு, அது பிற்காலத்தில் வாலாக மாறியிருக்கிறது. இதனால், அந்த சிறுவன் அனுமன் அவதாரம் என அப்பகுதி மக்கள் கொண்டாடுகின்றனர்.
இராமாயணத்தில் முக்கியக் கதாப்பாத்திரமாகத் திகழ்ந்து, மிகப்பெரிய பலசாலியாக சித்தரிக்கப்பட்டவர் பகவான் அனுமன். சிறந்த பிரம்மச்சாரியான இவர், தீவிர ராமபக்தன். ஒரு முறை, இலங்கேஸ்வரன் இராவணனின் அகந்தையை அடக்க, அனுமன் தனது நீண்ட வாலை சிம்மாசனமாக மாற்றிக்கொண்டக் கதை, இராமாயணம் படித்த அனைவருக்குமேத் தெரியும். ஆக பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம், வாலுடன் பிறந்து வாழ்திருக்கின்றது. இவர்கள் வானரக் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர்.
இதனை நினைவுகூறும் விதமாக, சில ஆண்குழந்தைகள் வால் போன்ற அமைப்புடன் பிறப்பது எப்போதாவது நிகழ்வது உண்டு. அந்த வகையில்,நேபாளத்தில் ஒரு அனுமன் வசித்து வருகிறார். நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் தேஷந்த். இவர் பிறக்கும் போதே ஒரு வித்தியாசமான குழந்தையாக பிறந்துள்ளார். இவர் பிறந்த போது இவரது முதுகின் கீழ் பகுதியில் உரோமங்கள் நிறைந்து வால் போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவரது பெற்றோர் இது ஏதோ மருத்துவ ரீதியிலான பிரச்சனை என இவரை பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
பல விதமான சிகிச்சைகள் எடுத்தும் இவருக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை. மருத்துவர்கள் பலர் இது முயன்றும் சரியாகாததால் இவர்கள் வேறு வழியில்லாமல் கோவில் கோவிலாக சென்று தன் மகனுக்கு பிரச்சனை சரியாக வேண்டியுள்ளனர். அப்பொழுது ஒரு முறை இவர்களை கோவிலில் பார்த்த ஒரு சாமியார். இந்த குழந்தை அனுமனின் அவதாரம் என்றும், எங்கு சென்றாலும் இந்த வால் அவனை விட்டு நீங்காது என்றும் கூறியுள்ளார்.
அந்தக் குழந்தை தற்போது 16 வயது சிறுவனாக வளர்த்துவிட்டான். அதேபோல வாலும் வளர்ந்துவிட்டது. இதனால், இந்த சிறுவனை அனுமன் அவதாரம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!
Share your comments