நாட்டில் ரெயில் சேவை தொடங்கி 169-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி 3.35 மணிக்கு இரயில் சேவையை முதன் முறையாக மும்பை தெற்கில் உள்ள போரி பந்தர்- தானே இடையே பிரிட்டிஷ் அரசு தொடங்கி வைத்தது. 14 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 400 பேர் பயணம் செய்தனர்.
இரயில் சேவை (Train Service)
தற்போது நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்தாக இரயில் சேவை மாறி உள்ளது. இந்தியாவின் முதல் இரயில் சேவை தொடங்கப்பட்டு 169-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தானே மாவட்ட இரயில் பயணிகள் சங்கம் சார்பில் தானே ரெயில் நிலையம் அருகே கொண்டாட்டம் நடத்தினர். இதில் தானே எம்.எல்.ஏ சஞ்சய் கேல்கர் மற்றும் பா.ஜனதா எம்.எல்.சி நிரஞ்சன் தவ்கரே ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீராவி இரயில் (Steam train)
1852ம் ஆண்டு நவம்பர் மாதம் நீராவி என்ஜின் கொண்ட பயணிகள் ரயில் இந்தியாவில் முதன் முதலாக சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. அதன் பிறகு 1853ம் ஆண்டில் ஏப்ரல் 16ல் அதிகாரப்பூர்வமாக நீராவி என்ஜின் கொண்ட பயணிகள் இரயில் இயக்கப்பட்டது.
1856ல் ராயபுரம்-வாலாஜா
1856ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி ராயபுரத்தில் இருந்து வாலாஜா நகர்(ஆர்காட்) வரை முதன் முதலாக ரயில் இயக்கப்பட்டது. பெங்களூர் பகுதி 1864ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்டது.
மேலும் படிக்க
Share your comments