2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்கள் இனி ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது. அரசின் இந்த அறிவிப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு பதில்
நாடாளுமன்ற மக்களவையில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவது தொடர்பாக மக்களவை எம்.பி., சுஷில் குமார் மோடியின் கேள்விக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளித்துள்ளார். அதில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2 கோடி கார்டுகள் ரத்து
கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் நகல், தகுதியற்ற மற்றும் போலி என மொத்தம் 2 கோடியே 41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் மட்டும் ஏழு லட்சத்து 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் போலிகள்
பீகாரில் 2018ஆம் ஆண்டில் 2.18 லட்சம் கார்டுகளும், 2019ஆம் ஆண்டில் 3.92 லட்சம் கார்டுகளும், 2020ஆம் ஆண்டில் 99,404 கார்டுகளும் ரத்து செய்யப்பட்டதாக சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 1.42 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர மகாராஷ்டிரா மாநிலத்தில் 21.03 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தகுதியில்லாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, ஏழைகளுக்கு மட்டுமே இலவச ரேஷன் பலன் கிடைக்கும். இந்த செயல்முறை முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் உருவாக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!
பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!
Share your comments