கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர்கள் வளர்ச்சியடைந்த நாகரீகத்தின் அடையாளமாக செங்கல்லை கருதுகின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு அளவுள்ள செங்கல்லை பயன்படுத்தி உள்ளனர். சிந்து சமவெளி மக்கள் 1:2:4 என்ற விகிதாசாரத்தில் கன அகல நீளமுள்ள செங்கல்லை பயன்படுத்தினர்.
சங்ககால செங்கல் பொதுவாக 1:3:6 என்ற விகிதத்தில் இருக்கும். கீழடி சிறப்புக்கு அதன் செங்கல்லும் ஒரு முக்கிய காரணம். சங்ககால மக்கள் ஒரு நகர நாகரீகத்தை கொண்டிருந்தனர் என்பதை எடுத்துச் சொல்வதாக இந்த செங்கற்கள் அமைந்துள்ளன.
சங்ககால செங்கற்கள் (Sangam Period Bricks)
கொற்கை அழகன்குளம் அரிக்கமேடு போன்ற பல இடங்களில் சங்ககால செங்கற்கள் கிடைத்துள்ளன. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சங்ககால தடயங்கள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் அரசு அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வில் குட்டூர் அங்குசகிரி கீழ் பையூர் ஐகுந்தம் போன்ற சில இடங்களில் சங்ககால செங்கற்களை கண்டறிந்துள்ளனர்.
இவற்றில் முழு செங்கற்களை கொண்டு கட்டிய கட்டடம் ஆம்பள்ளியை அடுத்த குட்டூர் சிவன் திட்டு என்ற இடத்தில் உள்ளது.
அந்த இடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 7:22:38 செ.மீ. அளவுள்ள 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால செங்கல் இம்மாத காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!
Share your comments