உலகமே, மக்கள் தொகை நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் நிலையில், 11 வயதுடைய ஒரு ரஷ்ய தாய், மொத்தம் 105 குழந்தைகளைப் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
23 வயதான அவர் தாய்மைக்கு அடிமையாகிவிட்டதாக கூறுகிறார்,தகவலின்படி கிறிஸ்டினா ஓஸ்டுர்க்(Christina Ozturk) மற்றும் அவரது 56 வயதான கணவர் கலிப் ஓஸ்டுர்க்(Galip Ozturk) ஆகியோர் அதிக குழந்தைகளைப் பெற்றதற்காக வரலாற்றில் இறங்க விரும்புகிறார்கள்.
இயற்கையாகவே பல குழந்தைகளைப் பெறுவது சாத்தியமில்லை என்பதால், அந்தத் தம்பதியினர் வாடகைத் தாயைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டினா மற்றும் கலிப் ஆகியோருக்கு இருக்கும் 11 குழந்தைகளில், மூத்த மகள் மட்டுமே இயற்கையான முறையில் பிறந்தாள், மீதமுள்ள அனைவரும் வாடகை தாய் மூலம் பெற்றனர்.
கிறிஸ்டினா மீண்டும் மீண்டும் ஒரு தாயாக ஆவதற்கு அடிமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவளும் கலிப்பும் "குழந்தைகளின் மகிழ்ச்சியான சிரிப்புகள்" தங்கள் வீட்டில் தொடர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த ஜோடி மில்லியனர்கள் மற்றும் தற்போது ஜார்ஜியாவின் பாட்டுமாவில் வசிக்கின்றனர். அவர்கள் வாடகைத்தாய் விருப்பங்களை ஆர்வத்துடன் தேடுகிறார்கள். கிறிஸ்டினா குழந்தைகளை மிகவும் விரும்பினாலும், அவர் அவர்களை கவனித்துக்கொள்வதை விரும்புகிறார். தம்பதியினர் 105 குழந்தைகள் வரை பெற முடியுமா என்பது முற்றிலும் உறுதியாகத் தெரியவில்லை ஆனால் அவர்கள் 11 குழந்தைகளுடன் நிற்க மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டினா தனது குழந்தைகளுக்கு ஒரு கடுமையான கட்டுப்பாடுகளை பி[பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குகிறார்கள், குடும்பத்தின் ஆயாக்கள் குழந்தைகளின் ஒவ்வொரு விவரங்களையும் டைரிகளில் பதிவு செய்து வருகிறார்கள். ஆயாக்களை கிறிஸ்டினா மற்றும் கலிப் கண்காணிக்கின்றனர். அவர்களின் சமீபத்திய குழந்தை ஜனவரி 16, 2021 இல் பிறந்துள்ளது.
மேலும் படிக்க:
யாருக்கு இல்லை செல்ஃபி மோகம்- 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிர் தப்பிய அதிசயம்!
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Share your comments