உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISFPI) மூலம் வரும் ஆண்டுகளில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இயற்கை வளங்களுக்கு ஏற்ப உலகளாவிய உணவு உற்பத்தியாளர்களை உருவாக்குவதற்கும், சர்வதேச சந்தைகளில் இந்திய உணவுப் பிராண்டுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், “உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (PLISFPI)” என்ற மத்தியத் துறைத் திட்டம் செயல்பட்டு வருகின்றது.
இந்தியாவில் உணவு பதப்படுத்தும் துறையானது சிறு தொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்துப் பிரிவுகளிலும் உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. வளங்களை வழங்குதல், பெரிய உள்நாட்டுச் சந்தை மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது செயல்பட இருக்கிறது.
இந்தத் துறையின் முழுத் திறனையும் அடைவதற்கு, உற்பத்தி, உற்பத்தித்திறன், மதிப்புக் கூட்டல் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலி இணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்த உதவுகிறது. இந்தியாவின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் “ஆத்மநிர்பார் பாரத் அபியான்” கீழ் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் உருவாக்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கங்கள்:
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விற்பனையுடன் உணவு உற்பத்தி நிறுவனங்களை ஆதரிக்கவும், வலுவான இந்தியப் பிராண்டுகளின் தோற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டில் செயலாக்க திறனை விரிவுபடுத்துவதற்கும், பிராண்டிங் செய்வதற்கும் என முதலீடு செய்ய தயாராக உள்ளது. உலகத் தெரிவுநிலை மற்றும் சர்வதேச சந்தைகளில் பரவலான ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உணவுப் பொருட்களை வலுப்படுத்துதலை இந்த் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பண்ணைக்கு வெளியே வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, பண்ணை விளைபொருட்களுக்கு லாபகரமான விலையையும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் உறுதி செய்தல் முதலான நோக்கங்களைக் கொண்டுள்ளது.
செயல்முறை
- இத்திட்டம் அகில இந்திய அளவில் செயல்படுத்தப்படும்.
- திட்டம் ஒரு திட்ட மேலாண்மை நிறுவனம் (PMA) மூலம் செயல்படுத்தப்படும்.
- விண்ணப்பங்கள்/ முன்மொழிவுகளின் மதிப்பீடு, ஆதரவிற்கான தகுதிச் சரிபார்ப்பு, ஊக்கத்தொகையை வழங்குவதற்குத் தகுதியான உரிமைகோரல்களை ஆய்வு செய்தல் போன்றவற்றுக்கு திட்ட மேலாண்மை நிறுவனம் பொறுப்பு ஆகும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது, பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியை ரூ.33,494 கோடிக்கு உற்பத்தி செய்வதற்கான செயலாக்க திறனை விரிவுபடுத்துவதற்காக ஆகும்.
எனவே, 2026-27ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments