நாடே கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தில் சிக்கியுள்ளபோது, குஜராத்தைச் சேர்ந்த சிலருக்கு தங்கள் செல்லநாயின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவசியமான ஒன்றாக இருந்திருக்கிறது. இது தொடர்பாக விதிகளை மீறியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரான் கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாகத் தொடரும் கொரோனா வைரஸ் தொற்று நமக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாகப் பொருளாதார ரீதியில் நம்மை முடக்கியதுடன், மன அளவிலும் பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையேத் தற்போது பரவும் ஒமிக்ரான் கொரோனா நம் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கோ, வளர்ப்புநாயின் பிறந்தநாள் கொண்டாட்டம் முக்கியமாக இருக்கிறது.
அபியின் பிறந்தநாள்
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் மதுவன் கிரீன் பார்ட்டி பகுதியில் வசித்து வருபவர் சிராக் என்ற டேகோ பட்டேல். இவரது சகோதரர் ஊர்விஷ் பட்டேல். இவர்கள் இருவரும் நண்பர் திவ்யேஷ் மெஹாரியாவுடன் இணைந்து தங்களுடைய அபி என்ற செல்ல நாயின் பிறந்த நாளை கோலாகலமுடன் கொண்டாடியுள்ளனர்.
விதிகள் காற்றில்
இதில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என அதிகளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் ஆகிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
3 பேர் கைது (3 people arrested)
இதுதவிர, பிரபல நாட்டுப்புற பாடகர் ஒருவரையும் வரவழைத்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த தகவல் போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து தொற்று நோய்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
சபாஷ் போலீஸார்
நாடே வைரஸ் பரவலில் இருந்துத் தப்புவது எப்படி? என சிந்தித்திருக்கும் வேளையில், நாயின் பிறந்தநாள் ரொம்ப முக்கியம்தான் போங்க.
சரிக் கொண்டாட்டத்தை அனுமதிக்கலாம் என்றால், சமூக இடைவெளி, முகக்கவசம் இல்லாதது, விளைவை உணராததையேக் காட்டுகிறது. சபாஷ் போலீசார்.
மேலும் படிக்க...
முழு ஊரடங்கு அமல்- சென்னையில் பஸ், ஆட்டோ, மெட்ரோ ரயில்கள் ஓடாது!
Share your comments