ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முடிவு விரைவில் கேபினட் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்கும்.
தேர்தல் வாக்குறுதி (Election promise)
அண்மையில் கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பிஜேபி கட்சித்தலைமையின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official announcement)
இதைத்தொடர்ந்து, தேர்தலில் பாஜக வெற்றிபெற்று கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். அதன்பிறகும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தகுதி
இதன்படி அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இதனால் பயன் பெறுவார்கள். இதன்படி, அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். இதனால் சுமார் 1.84 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு நிம்மதி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் சுமையாகவும், நெருக்கடியாகவும் உள்ளது. இந்நிலையில், ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவது பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது குறித்த முன்மொழிதலை தயாரிக்கும்படி கோவா உணவுத் துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த முன்மொழிதலுக்கு அடுத்த கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?
Share your comments