அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக இமாச்சலப் பிரதேச முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு
நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் உயர்வு வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை என இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
அதன்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 42% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, தற்போது இமாச்சல பிரதேச முதல்வர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான அறிவிப்பில், இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வழங்கப்பட்டு வரும் 31% அகவிலைப்படியில் 3% உயர்த்தப்பட்டு, 34% அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2.15 லட்ச ஊழியர்களும் மற்றும் 1.90 லட்ச ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க
குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய்: வெளியான முக்கிய அப்டேட்!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ரேஷன் விதிமுறைகளில் மாற்றம்!
Share your comments