மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்தில், அகவிலைப்படி உயர இருக்கும் நிலையில், தற்போது வீட்டு வாடகைப் படி மற்றும் அடிப்படைச் சம்பளமும் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சம்பள உயர்வு (Salary hike)
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டே வரும் நிலையில், தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து மத்திய அரசுப் பணியாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் நிலையில்,மேலும் 4% உயர்த்தப்பட்டு அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படைச் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு விரைவில் அடிப்படைச் சம்பளமும் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில், மீண்டும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரித்தால், வீட்டு வாடகைப் படித் தொகையும் 3 சதவீதமாக உயரும்.
இதனால், ஒரே நேரத்தில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி, அடிப்படைச் சம்பளம் மற்றும் வீட்டு வாடகைப் படி எனும் மூன்றும் உயர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க
மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மொபைல் எண்: மின்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
குழந்தைகளுக்கு வந்தாச்சு பேபி பெர்த் வசதி: IRCTC முக்கிய அறிவிப்பு!
Share your comments