ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. தற்போதைய சூழலில், வருமான வரியை சேமிக்க உதவும் நான்கு எளிய திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)
தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) முதலில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அனைவரும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு Section 80C கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரி விலக்கு பெறலாம்.
பிபிஎப் (PPF)
பிபிஎப் (PPF) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு மட்டுமல்லாமல், அதனால் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கும், மெச்சூரிட்டி தொகைக்கும் கூட வருமான வரி விலக்கு கிடைக்கிறது.
இபிஎப் (EPF)
இந்தியாவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு EPFO நிறுவனத்தின் கீழ் இபிஎப் (EPF) கணக்கு இருக்கும். இந்த இபிஎப் கணக்கிற்காக மாதம் தோறும் சம்பளத் தொகையில் 12% பிடித்தம் செய்யப்படும். அதில் ஓய்வூதியத்துக்காக 8.33% தொகை பிடித்துக்கொள்ளப்படுகிறது. இந்த பங்களிப்புக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி (Section 80C) கீழ் வருமானம் வரி விலக்கு பெற முடியும்.
ஈக்விட்டி சேமிப்பு
ஈக்விட்டி சேமிப்பு திட்டங்களில் (Equity Linked Savings Scheme) முதலீடு செய்யப்படும் தொகை மியூச்சுவல் ஃபண்ட்களை போலவே பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றன. ஈக்விட்டி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் தொகைக்கும் Section 80C கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.
விதிமுறை
மேற்கூறியபடி இபிஎப், பிபிஎப், தேசிய ஓய்வூதிய திட்டம், ஈக்விட்டி சேமிப்பு திட்டம் போன்ற எந்தவொரு திட்டமாக இருந்தாலும், பழைய வருமான வரி முறையை (Old income tax regime) தேர்வு செய்தால் மட்டுமே வரி விலக்கு பெற முடியும். புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு: பாடத்திட்டத்தில் மாற்றம்!
பெண்களுக்கான "மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்": அஞ்சலகத் திட்டம் அறிமுகம்!
Share your comments