கர்நாடகா, உத்தரபிரதேசம் உட்பட 4 மாநில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், அதனை உடனே தங்கள் ஊழியர்களுக்கும் வழங்க சில மாநில அரசுகள் முன்வருவது வழக்கம்.
அந்த வகையில், மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய உடனேயே, அசாம், ஹரியானா, ஒடிசா, மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அதன் 7வது ஊதியக் குழு பரிந்துரையின்படி தங்கள் மாநில ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தின.
அரசுகள் முடிவு
இதன் தொடர்ச்சியாக தற்போது கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் தற்போது அகவிலைப்படியை 4% உயர்த்த முடிவு செய்துள்ளன. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதேநேரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடுத்த டிஏ உயர்வை எதிர்பார்த்துள்ளனர்.
அதிகரிக்க வாய்ப்பு
அறிக்கையின்படி அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அகவிலைப்படியை 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க...
Share your comments