PF ஊழியர்களின் கணக்கில் EPFO சுமார் 40 ஆயிரம் ரூபாயை விரைவில் டெபாசிட் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரூ.40,000 தொகையை EPFO எப்படி வழங்கவுள்ளது. இந்தத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது EPFO.
40,000 ரூபாய் டெபாசிட் (Rs. 40,000 Deposit)
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் பிஎஃப் (PF) கணக்கில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் பிடித்தம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் தவறாமல் பிடிக்கப்படும் இந்த பிஎஃப் பணம் தான் உங்களுடைய PF அக்கௌன்ட் பேலன்ஸாக காட்சியளிக்கிறது. உங்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகைகளுக்கான வட்டியை EPFO இப்போ வழங்கவுள்ளது.
ஊழியர்களின் PF கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வைப்பு நிதி வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, உங்களுடைய PF கணக்கில் இருக்கும் பேலன்ஸ் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், இந்த ரூ.40,000 உங்களுக்கு வழங்கப்படும் என்று EPFO தெரிவித்துள்ளது. இந்த ரூ.40,000 தொகையை, சம்மந்தப்பட்ட PF ஊழியர் கணக்குகளில், EPFO விரைவில் டெபாசிட் செய்யுமென்று உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
இந்த ரூ.40 ஆயிரம் தொகை, உங்கள் 5 லட்சம் பேலன்ஸிற்கான வட்டியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. EPFO குறிப்பிட்ட தேதி என்று எந்தவொரு தகவலையும் இப்போதைக்கு வெளியிடவில்லை. ஆனால், இந்த தொகை மிக விரைவில் PF கணக்கில் வட்டி பணமாக மாற்றம் செய்யப்படும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறியுள்ளது. ரூ.40,000 தொகையை பெறக் கட்டாயம் ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோர் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய வசதி அறிமுகம்!
Share your comments