ஆகஸ்ட் 15-ம் தேதி (India) மட்டுமல்லாமல் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திரத் தினத்தை நாம் கொண்டாட உள்ளோம். ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் 5 நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
பஹ்ரைன் (Bahrain)
மக்களிடம் ஐ.நா சபை வாக்கெடுப்பு நடத்திய பின் ஆகஸ்ட் 15, 1971-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பஹ்ரைன் விடுவிக்கப்பட்டது.இதன்போதிலும் முன்னாள் ஆட்சியாளர் ஈசா பின் சல்மான் அல் கலிஃபா அரியணை ஏறிய நாளுக்கு இணையாக டிசம்பர் 16 அன்று பஹ்ரைன் அதன் தேசிய தினத்தை கொண்டாடுகிறது.
லிச்சென்ஸ்டீன்(Liechtenstein)
உலகின் ஆறாவது சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் 1866 முதல் ஜெர்மன் பிடியல் இருந்தது. ஆகஸ்ட் 15, 1940-ம் ஆண்டு இந்த நாடுக்கு ஜெர்மனியிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது.
தெற்கு மற்றும் வட கொரியா(South and North Korea)
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியை அடைந்தது. இதனால் ஆகஸ்ட் 15, 1945-ல் கொரிய தீபகற்பகத்தில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது.
சோவியத் மற்றும் அமெரிக்கா படையினரால் கொரிய தீபகற்பம் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இதனால் வட கொரியா மற்றும் தென் கொரியா இரு நாடுகளும் 1947-ல் தங்களது சுதந்திர அரசை நிறுவியது.
காங்கோ குடியரசு(Republic of the Congo)
ஆகஸ்ட் 15, 1960-ல் பிரான்ஸ் அரசிடமிருந்து காங்கோ சுதந்திரம் அடைந்தது. 1800-களிலிருந்து பிரனாஸ் காங்கோவை பிடியில் வைத்திருந்தது.
மேலும் படிக்க:
முடி இழந்து,வழுக்கை ஆகாமல் தவிர்க்க நடவடிக்கை!
தமிழக வேளாண் பட்ஜெட் சிறப்பம்சங்கள்!
Share your comments