1. மற்றவை

தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 5000 ரூபாய் பென்சன்!

R. Balakrishnan
R. Balakrishnan
Monthly 5000 rs Pension Scheme

அடல் பென்ஷன் யோஜனா 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த திட்டம் அமைப்புசாரா துறைகளில் பணிபுரிபவர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது 18 முதல் 40 வயதுடைய இந்திய குடிமகன் எவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில், டெபாசிட் செய்பவர்களுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 மற்றும் அதிகபட்சமாக ரூ.5,000 பெறலாம்.

அடல் பென்சன் யோஜனா (Adal Pension Yojana)

மத்திய அரசின் இந்த பென்சன் திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு பலன் கிடைக்கும். ஒரு நபர் 18 வயதில் அடல் பென்சன் யோஜனாவில் சேர்ந்தால், 60 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.5000 மாதாந்திர ஓய்வூதியத்திற்காக அவர் மாதம் ரூ.210 டெபாசிட் செய்ய வேண்டும்.

பலன்கள் (Benefits)

  • இத்திட்டத்தில் தினமும் 7 ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.
  • அதே சமயம் மாதந்தோறும் 42 ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
  • நீங்கள் 2000 ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பினால், 84 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
  • அதேபோல, ரூ.3000 ஓய்வூதியம் பெற விரும்பினால், நீங்கள் மாதம் ரூ.126 முதலீடு செய்ய வேண்டும்.
  • 4000 ரூபாய் மாத ஓய்வூதியம் பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் 168 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

சிறப்பம்சங்கள் (Special Features)

திட்டத்தின் மிகப்பெரிய அம்சமே இதில் கிடைக்கும் வரிச் சலுகைதான். அடல் பென்சன் யோஜனாவில் முதலீடு செய்பவர்கள் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம். இது தவிர, சில சமயங்களில் ரூ.50,000 வரை கூடுதல் வரிச் சலுகையும் கிடைக்கும். அதாவது, மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தில் வரி விலக்கு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு முதலீட்டாளர் 60 வயதுக்கு முன் இறந்துவிட்டால், அவருடைய மனைவி/கணவன் இந்தத் திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறலாம். கணவரின் மரணத்திற்குப் பிறகு அந்த நபரின் மனைவி மொத்த தொகையையும் கோரலாம் என்ற விருப்பமும் உள்ளது. மனைவியும் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு மொத்தத் தொகை கிடைக்கும்.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வரும் நற்செய்தி!

பென்சன் உயர்வு: பழைய ஓய்வூதிய திட்டம்: நிதியமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

English Summary: 5000 rupees monthly pension if you invest 7 rupees daily! Published on: 04 December 2022, 08:35 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.