1. மற்றவை

மலிவான விலையில் 5G ஐபோன்! இன்றே வாங்குங்க!!

Poonguzhali R
Poonguzhali R
5G iPhone at the Cheapest Price! Get Today !!

அமேசானில் மான்சூன் கார்னிவலில் தற்போது விற்பனை நடந்து வருகிறது. விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியன பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இது சரியான நேரம். எவ்வாறு மலிவான விலையில் பொருட்களை வாங்குவது என இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு ஐபோன் வாங்க வேண்டுமா? அதும் குறைந்த விலையில் வாங்க வேண்டுமா? நீங்கள் ஐபோன் ரசிகரா? இப்படியெல்லாம் இருந்து லேட்டஸ்ட் போனை வாங்க விரும்பினால், இன்று ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3-ஐ மிகக் குறைவான விலையில் வாங்கலாம். எனவே, ஐபோன் எஸ்இ 3க்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை! புதிய விலை நிலவரம்!

ஆப்பிள் ஐபோன் எஸ்இ (64 ஜிபி) (3வது தலைமுறை) மொபைலின் அறிமுக விலை என்பது ரூ.43,900 ஆகும். ஆனால், இது அமேசானில் ரூ.41,900க்கு கிடைக்கிறது. அதாவது, போனில் முழுமையாக 5% தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் இருக்கின்றன. இதன் காரணமாகப் போனின் விலை மேலும் கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!

ஐபோன் எஸ்இ 3-யின் சிறப்பு அம்சங்கள்

  • ஐபோன் எஸ்இ 3 5ஜி கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம் 12 மெகாபிக்சல் ஆட்டோ போக்கஸ் கேமரா இருக்கும்.
  • அதோடு, செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் இருக்கிறது.
  • 3000mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது.

மேலும் படிக்க: FD-யின் வட்டியை அதிகரித்த வங்கிகள் எவை? புதிய வட்டிவிகிதங்களின் பட்டியல் உள்ளே!

ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது ஹெச்டிஎஃப்சி வங்கியின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஐபோன் எஸ்இ 3 வாங்கினால், முழுசாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதன் பிறகு இந்த போனின் விலை ரூ.40,900 ஆக இருக்கும். குறைந்த விலையில் போனை வாங்க விரும்பினால் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு என்பது கூடுதல் தகவல்.

மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!

ஐபோன் எஸ்இ 3 இல் ரூ.11,350 எக்ஸ்சேஞ்ச் சலுகை இருக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், நீங்கள் தள்ளுபடி பெறலாம். ஆனால் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.11,350 தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. முழுமையாகப் பெற முடிந்தால், போனின் விலை ரூ.29,550 ஆக இருக்கும்.

மேலும் படிக்க

சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம்!

அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது எப்படி? இன்றே தொடங்குங்கள்!

English Summary: 5G iPhone at the Cheapest Price! Get Today !! Published on: 22 June 2022, 11:57 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.