மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியினை ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி, ஜூலை மாதங்களில் அரசு உயர்த்திக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் இப்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய இரண்டு தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றைக் குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
அரசு ஊழியர்கள் பலரும் குறிபாக மத்திய அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகிழ்ச்சியான செய்தி வந்துவிட்டது. ஒரே நேரத்தில் ஊழியர்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் காத்துகொண்டு இருக்கின்றன. அதாவது மீண்டும் லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. அதோடு, பதவி உயர்வும் கிடைக்க போகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் கீழ் கொடுக்கப்படுகின்றன.
தற்பொழுது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஊழியர்களுக்கான அப்ரெய்ஸல் விண்டோ-வானது திறக்கப்பட்டது. பணியாளர்கள் செல்ஃப் அசெஸ்மென்டினைப் பூர்த்திச் செய்து ரிப்போர்டிங் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
பணியாளர்கள் நிரப்பிய செல்ஃப் அசெஸ்மென்ட் அதிகாரி அளிக்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பதவி உயர்வு முடிவு செய்யப் பெறும். வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை (ஏபிஏஆர்) தொகுதி தயாரிக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ வட்டாரங்கள் தெரிவித்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து விரைவில் ஆன்லைன் விண்டோவும் தொடங்கும். அதன் பின்பு, ஃபைனல் அசெஸ்மென்ட்-ஆனட்து அனுப்பப்படும்.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
மையத்தின் அனைத்து ஊழியர்களும் அப்ரெய்ஸல் சுழற்சியில் வருவார்கள். குரூப் ஏ, குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கான அப்ரெய்ஸல் விண்டோ திறக்கப்படுகின்றது. 2021-22 நிதியாண்டுக்கான வருடாந்திர மதிப்பீட்டுத் தேதி நெருங்கிவிட்டது, ஜூலை 31க்குள் முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) படி, குழு A, B மற்றும் C-ன் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கைக்கான (ஏபிஏஆர்) விண்டோ-வை திறப்பில் வைத்துள்ளது. ஊழியர்களின் ஏபிஏஆர்நிலுவையில் இருப்பதால், அவர்களுக்கு ஏபிஆர் பலனும் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
மத்திய ஊழியர்களுக்கு DoPT மூலமாக ஆன்லைனில் படிவங்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. மதிப்பீட்டு பணியும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணியாளர்கள் படிவத்தில் உள்ள தகவல்களைப் பூர்த்திச் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஜூன் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை முடிக்க ஜூலை 31 வரை கால அவகாசம் எடுக்கும். இதனுடன் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசாங்கம் இரண்டு முறை உயர்த்தி வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதே நிலையில், அகவிலைப்படியின் இரண்டாம் தவணை ஜூலையில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஏஐசிபிஐ குறியீட்டின் டேட்டா-வின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments