மத்திய அரசுப் பணியாளர்கள் வருகின்ற ஜூலை மாதத் தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர. இந்த நிலையில், ஃபிட்மென்ட் காரணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஃபிட்மென்ட் காரணி
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தொடக்க நிலை அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு வீட்டு வாடகைப் படி, போக்குவரத்துப் படி, மருத்துவ செலவுகளுக்கானத் தொகை போன்ற பல்வேறு பண பலன்கள் அளிக்கப்படுகிறது.
இவை அரசுப் பணியாளர்கள் தங்களின் செலவுகளை தற்போதைய காலத்திற்கு ஏற்றாற் போல் சமாளிக்க உதவியாக இருக்கும். இந்த நிலையில், இறுதியாக 2023 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 42% ஆக இருக்கும் நிலையில், 2023 ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 சதவீதமாக இருக்கும் நிலையில், விரைவில் 3.68 ஆக உயர்த்தப்பட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இதனால் ரூ.18,000 ஆக இருக்கும் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
PM Kisan: 2000 ரூபாய் உதவித்தொகை பெற ஆதார் இணைப்பு கட்டாயம்!
பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!
Share your comments