புதிய ஆண்டு தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தி கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓராண்டு கால ஆசைகள் நிறைவேறுவுள்ளன. ஃபிட்மென்ட் பேக்டர் தொடர்பான பணிகள் நடந்து வருவதாக எமது இணை இணையதளமான ஜீ பிசினஸ்ஸின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. இது குறித்த முடிவு 2023 இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரும் சம்பள உயர்வு அடிப்படை ஊதியத்தின் மட்டத்தில் இருக்கும்.
ஃபிட்மென்ட் ஃபேக்டரில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? எதிர்பார்ப்பு என்ன?
செப்டம்பரில் ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கப்படும். எனினும், ஏழாவது ஊதியக் குழுவின் படி, ஃபிட்மென்ட் ஃபேக்டரை அதிகரிக்க வேண்டும் என, மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சம்பள உயர்வு
மக்களவை தேர்தலுக்கு முன், 2023ல், இந்த கோரிக்கை தொடர்பான விஷயத்தை இறுதி செய்ய, அரசு பரிசீலித்து வருவதாக, வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, 2.57 மடங்குடன் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த எண்களில் ஒரு சமரசத்தை செய்து அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை மூன்று மடங்காக உயர்த்தக்கூடும் என்று செய்தி உள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 மடங்கு ஆனாலும் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். உதாரணமாக, அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக இருக்கும் ஊழியர்களுக்கு, தற்போது ஊதியம் 18,000 X 2.57 = 46,260 ஆக இருக்கும். எனினும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூன்று மடங்காக அதிகரிக்கும் போது அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக அதிகரிக்கும். அப்போது கொடுப்பனவுகள் தவிர மொத்த சம்பளம் 21000X3 அதாவது ரூ.63,000 ஆகும்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள பொதுவான கொடுப்பனவுகளைத் தவிர மற்ற அலவன்ஸ்களும் உள்ளன. சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் (கிராஜுவிட்டி) அடங்கும். மத்திய ஊழியர்களின் இபிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஊழியர்களின் இபிஎஃப் மற்றும் கிராச்சுட்டியைக் கணக்கிடுவதற்கு வேறு சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. கொடுப்பனவுகள் மற்றும் பிற விலக்குகள் சிடிசி- இலிருந்து செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு!
PM Kisan: தகுதியில்லாத விவசாயிகள் பணத்தை திருப்பியளிக்க வேண்டும்: அரசு உத்தரவு!
Share your comments