7வது ஊதியக்குழு விரைவில் முடிவடையும் என்றும், 8வது ஊதியக்குழு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 வரை உயரக்கூடும் எனத் தெரிகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் என்ற விகிதத்தில் ஃபிட்மென்ட் வழங்கப்படுகிறது.அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் 7வது ஊதியக்குழு விரைவில் முடிவடையவுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் பல ஊடகங்களில் அடுக்கடுக்காக வெளியாகிக்கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஊதியம் அதிகளவு உயரப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கென 8-வது ஊதிய குழுவை அரசு அமல்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது.
7வது ஊதியக்குழு
இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 7வது ஊதியக்குழுவின்படி சம்பளம், படிகள் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி கிடைக்கும் என்றும், ஃபிட்மென்ட் காரணியிலும், அகவிலைப்படியின் இருப்புத் தொகையிலும் அவர்களுக்கு உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரூ.95,000 வரை
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் என்ற விகிதத்தில் ஃபிட்மென்ட் வழங்கப்படும் நிலையில் 3.68 ஆக உயர்த்தப்பட வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 3.68 ஆக உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் 2 மடங்கு உயர்த்தப்படும் என தெரிகிறது. இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் 7வது ஊதியக்குழு விரைவில் முடிவடையும் என்றும், 8வது ஊதியக்குழு 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் ரூ.95,000 வரை உயரக்கூடும் எனத் தெரிகிறது.
மேலும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஃபிட்மென்ட் காரணி அங்கீகரிக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.8000 ஆகவும், அடிப்படைச் சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
சூரிய சக்தி பம்ப் செட் பராமரிப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் மானியம்!
Share your comments