CRPF - மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 9223 கான்ஸ்டபிள் (Technical and Tradesman) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இப்பகுதியில் காணலாம்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும். இப்படையானது மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள 9223 கான்ஸ்டபிள் (Technical and Tradesman) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற மார்ச் 27 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள 9223 பணியிடங்கள் எந்த வகையிலான பிரிவுகளை உள்ளடக்கியது, கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பின்வருமாறு-
காலி பணியிடங்களின் பிரிவு முறை:
Post Name | Vacancies |
Constable (Technical & Tradesmen) – Driver | 2372 |
Constable (Technical & Tradesmen) – Motor Mechanic Vehicle | 544 |
Constable (Technical & Tradesmen) – Cobbler | 151 |
Constable (Technical & Tradesmen) – Carpenter | 139 |
Constable (Technical & Tradesmen) – Tailor | 242 |
Constable (Technical & Tradesmen) – Brass Band | 196 |
Constable (Technical & Tradesmen) – Pipe Band | 51 |
Constable (Technical & Tradesmen) – Buglar | 1360 |
Constable (Technical & Tradesmen) – Gardner | 92 |
Constable (Technical & Tradesmen) – Painter | 56 |
Constable (Technical & Tradesmen) – Cook / Water Carrier | 2475 |
Constable (Technical & Tradesmen) – Washerman | 403 |
Constable (Technical & Tradesmen) – Barber | 303 |
Constable (Technical & Tradesmen) – Safai Karmachari | 824 |
Constable (Technical & Tradesmen) – Washer Women | 3 |
Constable (Technical & Tradesmen) – Hair Dresser | 1 |
Constable (Pioneer) – Mason | 6 |
Constable (Pioneer) – Plumber | 1 |
Constable (Pioneer) – Electrician | 4 |
கல்வித்தகுதி: விண்ணப்பத்தாரர் 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வயது: குறைந்தப்பட்சம் 18 முதல் அதிகப்பட்சமாக 27 வயது வரை இருக்கலாம். (பணியின் பிரிவுக்கு தகுந்தவாறு வயது வரம்பு வேறுபடும்)
வயது தளர்வு:
- OBC விண்ணப்பத்தாரர்கள்: 03 ஆண்டுகள்
- SC/ST விண்ணப்பத்தாரர்கள்: 05 ஆண்டுகள்
- PWD விண்ணப்பத்தாரர்கள்: 10 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-
- SC/ ST/ ESM/ பெண்: Nill
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.03.2023
- https://crpf.gov.in/ - இணையதளத்தைப் பார்வையிடவும்
- CRPF தொழில்/விளம்பர மெனுவைக் கண்டறியவும்.
- CRPF கான்ஸ்டபிள் (Technical and Tradesman) வேலை அறிவிப்பைத் தேடி தேர்வு செய்யவும்.
- CRPF கான்ஸ்டபிளுக்கான (Technical and Tradesman) வேலை அறிவிப்பு தொடர்பான விவரங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.
- உங்கள் தகுதியைச் சரிபார்த்து, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பிரிவில் விண்ணப்பிக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- துல்லியமான தகவல்களைக் கொடுத்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- தேவைப்பட்டால், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 25.04.2023
- உங்கள் விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுக்கவும்
- பணம் செலுத்தும் முறை: ஆன்லைனில் (பீம் யுபிஐ, நெட் பேங்கிங் மூலம், விசா, மாஸ்டர் கார்டு, மேஸ்ட்ரோ, ரூபே கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம்)
பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு (CBT), உடல் திறன் தேர்வு (PET) மற்றும் உடல் தரநிலைத் தேர்வு (பிஎஸ்டி), திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100/- வரை இருக்கலாம்.
காற்றுள்ளப்போதே தூற்றிக்கொள் என்பதற்கிணங்க உங்களின் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்றவாறு விருப்பத்தின் அடிப்படையில் CRPF கான்ஸ்டபிளுக்கான (Technical and Tradesman) பிரிவிலுள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பியுங்கள்.
மேலும் முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள: https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ATTACHMENTS/263_1/1_145032023.pdf
மேலும் காண்க:
PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
42 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி- எந்த கிராமத்தில், எந்த ஏரி? முழுப்பட்டியல் இதோ
Share your comments