ஒரு குழந்தை 2 வயதிலேயே சிகரெட் பிடித்தது என்பது உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான் அதிலும் நாள் ஒன்றுக்கு 40 சிகரெட் பிடித்துள்ளது அந்தக்குழந்தை.
புகைப்பழக்கம் (Smoking)
புகை நமக்குப் பகை என்பதை நம் அனைவருமேத் தெரியும். விபரீதத்தைத் தெரிந்திருந்தும், விளைவுகளை உணராதவர்கள் இன்னும், ஏதோ காரணத்திற்காக புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் புகைப்பிடிப்பவர்கள், தினமும் 4-5 சிகரெட்டைப் பிடிப்பார்கள். சிலரோ ஒரு நாளுக்கு ஒரு பாக்கெட் கூட பிடிப்பார்கள்.
ஆனால் இங்கு 2 வயது குழந்தை புகைப்பிடிக்கிறது. அதுவும் ஒரு நாளுக்கு 4 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் இது உண்மை.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த அந்தக் குழந்தையின் பெயர் அர்டி ரைசல் (Ardi Rizal). 2 வயதிலேயே ஒரு நாளுக்கு 40 சிகரெட் பிடிக்கும் அளவிற்கு புகைப்பிடிப்பதற்கு அடிமையாகியிருந்தது.
விளையாட்டு வினையானது
இது குறித்து அர்டியின் தாயார் டயானா கூறுகையில், அர்டி பிறந்து 18 மாதம் இருந்த போது அவரது தந்தை விளையாட்டாக அவனை புகைப்பிடிக்க வைத்தோம். அப்பொழுது முதல் புகைப்பழக்கத்திற்கு குழந்தை அடிமையானான். அடுத்த 6 மாதத்திலேயே ஒரு நாளுக்கு 40 சிகரெட் பிடிக்கும் அளவிற்கு புகைபிடிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவல் தெரியவந்ததும், இந்தோனேஷிய அரசு இந்த குழந்தையை புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுத்தது. அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக சிகரெட் பிடிப்பதையே நிறுத்திவிட்டானர். இதற்காக பல சிகிச்சைகளைச் செய்துள்ளனர்.
உடல் எடை அதிகரிப்பு (Weight gain)
ஆனால் புதிய தலைவலி வந்துவிட்டது. அவர் புகைப்பிடிப்பதை நிறுத்த நிறுத்த அவன் Junk Foods சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்துக்கொண்டான்.
பீட்சா, பர்கர், போன்ற உணவுகளை சாப்பிட துவங்கிவிட்டான். இதனால் அவன் உடல் எடை அதிகரிக்க துவங்கிவிட்டது.
22 கிலோ எடை (Weight 22 kg)
5 வயதிலேயே 22 கிலோ எடையில் இருந்துள்ளார்.அதன் பின்னர் மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு உடல் எடையை குறைத்து உணவை முறைப்படுத்த சிகிச்சைகளையும் அறிவுரைகளையும் வழங்கினர். தற்போது அவர் சாதாரணமான சிறுவன் போல மாறியுள்ளான். தற்போது 13 வயதாகும் அந்த சிறுவனின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க...
Share your comments