1. மற்றவை

Aadhaar PAN Link: மார்ச் 31-க்குள் இணைக்காவிட்டால் ரூ.10,000 கட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காதவர்கள், ரூ.10,000 அபராதம் உள்ளிட்டப் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது மட்டுமல்லாமல், உங்கள் பான் அட்டை செயலிழக்க நேரிடும். எனவே எதிர்விவுகளைத் தவிர்க்க இணைக்கும் பணியை உடனே செய்யுங்கள்.

மத்திய அரசு பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 என்று நிர்ணயித்துள்ளது. கடைசி தேதிக்குள் இந்த கார்டுகளை இணைக்கவில்லை என்றால், நீங்கள் பல்வேறு அபராதங்களை சந்திக்க நேரிடும். இது மட்டுமல்ல, மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், உங்கள் பான் அட்டை  செயலிழந்துவிடும். பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

இது தவிர பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை-யை இணைக்காதவர்கள் மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியமாகும். மேலும், வருமான வரி தாக்கல் செய்யும்போதும் விண்ணப்பிக்கவும், வட்டி செலுத்தும் போதும் உங்கள் பான் எண்ணை உள்ளிட வேண்டியது கட்டாயமாகும்.

உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் எந்த பரிவர்த்தனையிலும் உங்கள் பான் கார்டை வழங்க முடியாது. இருப்பினும், அபராதம் செலுத்துவதன் மூலம் காலக்கெடுவிற்குப் பிறகு இரண்டு கார்டுகளையும் இணைக்கலாம்.

விளைவுகள்

  • பான் கார்டு செயலிழந்துவிடும், மேலும் பரிவர்த்தனைகளுக்கு அதைப் பயன்படுத்த முடியாது.

  • வருமான வரிச் சட்டம், 1961ன் கீழ் உங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.

  • காலக்கெடுவுக்குப் பிறகு இந்த இரண்டு கார்டுகளையும் இணைத்தால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

  • உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்காமல் உங்களால் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய முடியாது.

  • பங்குச் சந்தை-யில் முதலீடு செய்ய முடியாது, ஏனெனில் டிமேட் கணக்கைத் திறக்கும்போது பான் கார்டைக் குறிப்பிடுவது அவசியமாகும்.

இணைப்பது எப்படி?
ஆதார் எண்ணுடன் பான்கார்டை இணைக்க முதலில் www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற இந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

பின் அந்த பக்கத்தில் ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் மற்றும் பெயர் ஆகிய தகவல்களை பதிவிட வேண்டும்.

பிறகுக் கொடுக்கப்பட்ட சில தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

பின் லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் ஆதார் - பான்கார்டு இணைக்கப்படும்.

அதன்பிறகு ஹோம் பக்கத்திற்கு சென்று தகவல்கள் மூலம் ஆதாருடன் இணைக்கப்பட்டதா சரி பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...

நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!

அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!

English Summary: Aadhaar PAN Link: Rs 10,000 cut if not connected by March 31! Published on: 21 March 2022, 08:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.